ஆளுநர் ஆர்.என்.ரவி திடீர் டெல்லி பயணம் : ரத்தாகுமா நீட் தேர்வு ?
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி திடீர் பயணமாக டெல்லிக்கு சென்றுள்ளார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு புதிதாக கட்டப்பட்ட திமுக அலுவலகத்தை திறந்து வைக்க தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் டெல்லி சென்றார், அப்போது,பிரதமர் மோடி,மத்திய உள்துறை அமைச்சர் மற்றும் மத்திய நிதி அமைச்சர் உள்ளிட்டோரை நேரில் சந்தித்து பேசினார்.
முதலமைச்சரின் சந்திப்பு தமிழக அரசியலில் பேசு பொருளான நிலையில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி திடீர் பயணமாக இன்று விமானம் மூலம் டெல்லிக்கு புறப்பட்டு சென்றுள்ளார்.
தனிப்பட்ட காரணங்களுக்காக ஆளுநர் டெல்லி சென்றுள்ளதாக கூறப்படுகிறது . அதே சமயம் ,நீட் விலக்கு மசோதாவை குடியரசுத்தலைவருக்கு அனுப்ப தமிழக அரசு அறிவுறுத்தி வருகிறது.இது தொடர்பாக தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களும் ஆளுநரை நேரில் சந்தித்து வலியுறுத்தினார்.
அதனை குடியரசுத் தலைவருக்கு அனுப்புவதாக ஆளுநரும் ஒப்புக்கொண்டார்.இந்த சூழலில்,நீட் விலக்கு மசோதா,கூட்டுறவு திருத்த மசோதா உள்ளிட்டவை நிலுவையில் உள்ள நிலையில் ஆளுநர் ஆர்.என்.ரவி டெல்லி பயணம் மேற்கொண்டுள்ளார்.