நீட் விலக்கு மசோதாவை திருப்பி அனுப்பினார் தமிழக ஆளுநர்
நீட் விலக்கு மசோதாவை தமிழக ஆளுநர் ஆர் .என் ரவி திருப்பி அனுப்பியுள்ளார்.
கடந்த வருடம் செப்டம்பர் மாதம் மருத்துவ படிப்புகள் மற்றும் மேல் படிப்புகளில் சேருவதற்கு கட்டாயமாக்கப்பட்ட நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி தமிழ்நாடு சட்டப்பேரையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம்
ஆளுநர் ஆர்.என். ரவிக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் அந்த மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பியுள்ளார்.
நீட் மசோதா குறித்து கடந்த 4 மாதங்களாக எந்த முடிவையும் ஆளுநர் எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்ட நிலையில் கடந்த 1-ம் தேதி ஆளுநர் ரவி நீட் மசோதாவை திருப்பி அனுப்பியுள்ளார்.
மசோதவை திருப்பி அனுப்பியதற்கான காரணத்தை கடிதமாக எழுதி சபாநாயகருக்கு அனுப்பியுள்ளதாகவும்,
நீட் தேர்வால் சமூகநீதி எந்த வகையிலும் பாதிக்கப்படவில்லை என்ற வேலூர் சிஎம்சி வழக்கில் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை மேற்கோள் காட்டி,
அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள விளக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 10 வருடங்களில் ஆளுநர் சட்டப்பேரவையில் நிறைவேற்றிய மசோதவை திருப்பி அனுப்பியது இதுவே முதல் முறை என்றும் கூறப்படுகிறது.