ஆட்சியமைக்க விஜய்க்கு அழைப்பு விடுக்காதது ஏன்? ஆளுநர் விளக்கம்

Vijay Governor of Tamil Nadu Thamizhaga Vetri Kazhagam
By Karthikraja May 07, 2026 09:44 AM GMT
Report

ஆட்சியமைக்க விஜய்க்கு அழைப்பு விடுக்காதது கூறித்து ஆளுநர் தரப்பில் விளக்கமளித்துள்ளார்.

ஆளுநர் விளக்கம்

2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில்108 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உள்ளது விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம்.

ஆட்சியமைக்க பெரும்பான்மைக்கு 118 எம்எல்ஏக்கள் தேவை என்னும் நிலையில், 5 எம்எல்ஏக்களை கொண்ட காங்கிரஸ் கட்சி நேற்று தவெகவிற்கு தனது ஆதரவை வழங்கியது. 

ஆட்சியமைக்க விஜய்க்கு அழைப்பு விடுக்காதது ஏன்? ஆளுநர் விளக்கம் | Tn Governor Explains Why Did Not Invite Vijay

மேலும், விசிக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளிடம் ஆதரவு கோரப்பட்ட நிலையில், செயற்குழுவில் விவாதித்து நாளை முடிவை அறிவிக்க உள்ளதாக தெரிவித்துள்ளன.

இந்நிலையில், தனிப்பெரும் கட்சி என்ற அடிப்படையில் ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்குமாறு தவெக தலைவர் விஜய் நேற்று தமிழ்நாடு பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகராயை சந்தித்து உரிமை கோரினர்.

இன்று வரை ஆளுநர் அழைப்பு விடுக்காத நிலையில், இன்று விஜய்யை ஆளுநரை நேரில் அழைத்து விளக்கம் அளித்துள்ளார். 

ஆட்சியமைக்க விஜய்க்கு அழைப்பு விடுக்காதது ஏன்? ஆளுநர் விளக்கம் | Tn Governor Explains Why Did Not Invite Vijay

இந்த சந்திப்பின் போது, தற்போது 113 எம்எல்ஏக்கள் மட்டுமே உள்ளதாகவும், பெரும்பான்மைக்கு 118 எம்எல்ஏக்கள் தேவை என்பதால் அழைப்பு விடுக்கவில்லை என தெரிவித்ததாக ஆளுநர் விஜய்யிடம் விளக்கமளித்துள்ளார்.

ஆளுநரின் இந்த செயலுக்கு காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.