இது காந்திய மண் வெறுப்புணர்வைத் தூண்டும் சக்திகளுக்கு இடமில்லை : முதலமைச்சர் ஸ்டாலின்

M K Stalin Mahatma Gandhi
By Irumporai 1 மாதம் முன்

தேசத் தந்தை மகாத்மா காந்தியின் 154வது பிறந்தநாளையொட்டி, சென்னை எழும்பூர் அருங்காட்சியகத்தில் உள்ள் காந்தி சிலைக்கு கிழே அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த காந்தியின் திருவுருவப்படத்திற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

காந்தி ஜெயந்தி   

நாட்டின் விடுதலைக்காக பாடுபட்ட தேசத்தந்தை மகாத்மா காந்தியின் பிறந்தநாள் ஒவ்வொரு ஆண்டும் காந்தி ஜெயந்தியாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதேபோல் அவரது 154வது பிறந்தநாள் நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்படு வருகிறது.

இது காந்திய மண் வெறுப்புணர்வைத் தூண்டும் சக்திகளுக்கு இடமில்லை : முதலமைச்சர் ஸ்டாலின் | Tn Governor And Cm Tribute To Mahatma Gandhi

இந்தியாவின் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட தேசிய விடுமுறை நாட்களில் காந்தி ஜெயந்தியும் ஒன்றாகும். இவரது பிறந்த நாள் இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் மற்றும் யூனியன் பிரதேசங்களிலும் அனுசரிக்கப்படுகிறது.

முதலமைச்சர் மரியாதை

இந்நிலையில், அவரது பிறந்தநாளையொட்டி டெல்லி ராஜ்கோட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு, பிரதமர் மோடி, துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர், நாடாளுமன்ற சபாநாயகர் ஓம்பிர்லா, காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர்.

மேலும் , முதலமைச்சர் ஸ்டாலி தனது ட்விட்டர் பதிவில் பேதங்களைக் கடந்து அன்பும் அமைதியும் மிளிரும் சமூகமாக இந்தியாவை உருவாக்கிட உழைத்த அண்ணல் காந்தியார் பிறந்த நாளில், சமத்துவமும் சகோதரத்துவமும் இந்த மண்ணில் தழைத்து, வெறுப்புணர்வைத் தூண்டும் சக்திகளுக்கு என்றும் இடமில்லை; இது காந்திய மண் எனச் சூளுரைப்போம் என குறிப்பிட்டுள்ளார்.