தனியார் பள்ளிகளுக்கு தமிழக அரசு எச்சரிக்கை

Tn government Private schools
By Petchi Avudaiappan Jun 22, 2021 03:08 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in தமிழ்நாடு
Report

தமிழகத்தில் உள்ள சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ, ஐஜிசிஎஸ்இ, மெட்ரிக் பள்ளிகள் அரசின் உத்தரவுகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

தனியார் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை மாணவர்கள் சேர்க்கை நடைபெற்று வரும் நிலையில் தனியார் பள்ளிகள் கட்டணம் பெறுவது குறித்து பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில் தனியார் பள்ளிகள் மாணவர்களிடம் 75% கட்டணம் மட்டுமே வசூலிக்கவேண்டும். கட்டணம் செலுத்தாத மாணவர்களை ஆன்லைன் வகுப்பிலிருந்து தனியார் பள்ளிகள் நீக்கக் கூடாது.

பிளஸ்1 மாணவர் சேர்க்கைக்கு அரசு வகுத்துள்ள விதிமுறைகளை தனியார் பள்ளிகள் பின்பற்ற வேண்டும். அங்கீகாரம் இன்றி செயல்படும் பள்ளிகள் உடனடியாக அங்கீகாரத்தை புதுப்பிக்கவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.