உக்ரைனில் இருந்து மாணவர்களை மீட்டுக் கொண்டு வந்துவிட்டதா தமிழக அரசு ? - எல்.முருகன் கேள்வி

ukrain tamilnadu dmk lmurugan
By Swetha Subash Mar 06, 2022 11:19 AM GMT
Swetha Subash

Swetha Subash

in அரசியல்
Report

தமிழ்நாடு அமைத்துள்ள குழு , இதுவரை எத்தனை மாணவர்களை உக்ரைனில் இருந்து மீட்டு வந்துள்ளது என மத்திய இணையமைச்சர் எல்.முருகன் கேள்விஎழுப்பியுள்ளார்.

மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் இன்று சென்னையில்  செய்தியாளர்களை சந்தித்தார் , அபோது பேசிய அவர் ,உக்ரைனில் இருந்து தினமும் 4 ஆயிரம் மாணவர்கள் மீட்கப்பட்டு வருகின்றனர்.

ஒவ்வொரு மாணவரையும் பாதுகாப்பாக இந்தியா அழைத்து வருவதுதான் மத்திய அரசின் நோக்கம். அந்த நோக்கத்தின் அடிப்படையில்தான் மத்திய அரசு செயல்பட்டு வருகிறது. இதுவரை மத்திய அரசு உக்ரைனில் இருந்து கிட்டத்தட்ட 15,000 பேர் இந்தியா வந்துள்ளது.

ஆனால் தமிழ்நாடு அமைத்துள்ள குழு இதுவரை எத்தனை மாணவர்களை உக்ரைனில் இருந்து மீட்டு வந்துள்ளது என கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும் நீட் தேர்வு குறித்து பேசிய அவர், எல்லாவற்றிற்கும் தகுதி தேர்வு என்பது ஒன்று உண்டு. அதன் அடிப்படையில்தான் நீட் தேர்வு நடைபெறுகிறது. தமிழ்நாட்டிற்கு நீட் தேர்வு வந்த பின்பு அரசு பள்ளி மாணவர்கள் அதிகம் பேர் மருத்துவம் படித்து வருகின்றனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.