ஓய்வு பெற்ற போக்குவரத்து ஊழியர்களின் கோரிக்கையை நிறைவேற்றிய முதல்வர் ஸ்டாலின்

Stalin Transport Employees Retirement benefits
By mohanelango Jun 02, 2021 08:02 AM GMT
Report

தமிழக போக்குவரத்து கழகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு ஓய்வூதிய பலன்கள் வழங்கப்படாமல் இருந்து வந்தன.

இந்த நிலையில் தமிழக அரசு போக்குவரத்து ஊழியர்களின் ஓய்வூதிய பலன்களை விரைந்து வழங்க வேண்டும் எனத் தொடர்ந்து கோரிக்கை வைக்கப்பட்டு வந்தது.

இந்தக் கோரிக்கையை ஏற்று 2457 ஓய்வு பெற்ற போக்குவரத்து ஊழியர்களுக்கு வழங்க வேண்டிய ஓய்வூதிய பணப்பலன்களின் நிலுவைத்தொகை ₹497.32 கோடி வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இதன் அடையாளமாக 6 போக்குவரத்து ஊழியர்களுக்கு இன்று தலைமைச் செயலகத்தில் அதற்கான காசோலையை முதல்வர் நேரில் வழங்கினார்.

ஓய்வு பெற்ற போக்குவரத்து ஊழியர்களின் கோரிக்கையை நிறைவேற்றிய முதல்வர் ஸ்டாலின் | Tn Government Releases Retirement Benefits

Gallery