நிவாரண தொகை..! ரேஷன் கார்டு இல்லயா.? கவலைப்படாதீங்க..! அரசின் அறிவிப்பு பாருங்க..!
அரசு தமிழக அரசின் வெள்ள நிவாரண நிதி வழங்குவதற்காக தமிழக அரசு 3 பிரிவுகளை அறிவித்துள்ளது.
நிவாரண நிதி
மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளை அடுத்து சென்னை, செங்கல்பட்டு,, காஞ்சிபுரம், திருவள்ளூர் போன்ற மாவட்டங்கள் தற்போது தான் இயல்பு நிலைக்கு திரும்பியிருக்கின்றது.
அரசு பல்வேறு மீட்புப்பணிகளை மேற்கொண்ட நேரத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக நிவாரணம் வழங்குவது குறித்தும் பெரிதாக ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டு, அதனை தொடர்ந்து நேற்று 4 மாவட்டங்களை சேர்ந்த பாதிக்கப்பட்டவர்களுக்கு 6000 ரூபாய் வழங்கப்படும் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டது.
அரசின் அறிவிப்பு
இது எந்தெந்த அடிப்படையில் யார் யாருக்கு வழங்கப்படும் என மக்கள் தரப்பில் சந்தேகங்கள் எழுந்தன. அந்த சந்தேகங்களை தீர்க்கும் வகையில் தற்போது அதற்கான வழிகாட்டுதல்களும் அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதாவது, ரேசன் அட்டை வைத்திருப்போர்.
ரேசன் அட்டைக்கு விண்ணப்பித்திருந்தாலும் நிவாரண தொகை.
சென்னையில் பல ஆண்டுகளாக வசிப்போர் வாடகை ஒப்பந்தம், கேஸ் பில் உள்ளிட்ட ஆதாரங்களை சமர்ப்பிக்க வேண்டும்.