கொரோனா 3வது அலை வந்தாலும் எதிர்கொள்ள தமிழக அரசு தயார்...!
கொரோனா மூன்றாவது அலை வந்தாலும் அதை எதிர்கொள்ள தமிழக அரசு தயாராக உள்ளதாக அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
சேலம் உருக்காலை வளாகத்தில் ஆக்சிஜன் வசதியோடு கூடிய 500 படுக்கைகள் கொண்ட சிகிச்சை மையத்தை தமிழக முதலமைச்சர் முக.ஸ்டாலின் கடந்த மாதம் திறந்து வைத்தார். இன்று அதே வளாகத்தில் அமைக்கப்பட்ட கூடுதலாக 500 ஆக்சிஜன் படுக்கைகளை அமைச்சர் செந்தில் பாலாஜி திறந்து வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழக அரசின் தீவிர நடவடிக்கைகள் காரணமாக சேலம் மாவட்டத்தில் அடுத்த 10 நாட்களுக்குள் கொரோனா தொற்று எண்ணிக்கை பூஜ்ஜியம் ஆகும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
மேலும் கொரோனா மூன்றாவது அலை வந்தாலும் அதை எதிர்கொள்ள தமிழக அரசு தயார் நிலையில் உள்ளதாகவும் அவர் கூறினார்.