ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் தயாரிக்க தமிழக அரசு முடிவு: முதல்வர் அறிவிப்பு
தமிழக முதல்வர் தலைமையில் ஆக்சிஜன் உற்பத்திக்காக ஸ்டெர்லைட் ஆலையை திறப்பது தொடர்பாக இன்று அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது.
அதில் ஆக்சிஜன் உற்பத்திக்கு மட்டும் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அரசியல் கட்சிகள் ஒப்புதல் தெரிவித்திருந்தன.
அதனைத் தொடர்ந்து தற்போது நான்கு மாதங்கள் ஆக்சிஜன் தயாரிப்பதற்கு மட்டும் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.
தாமிர உற்பத்தி உள்ளிட்ட வேறு எந்த அலகையும் திறக்க அனுமதியில்லை. இதற்காக ஒரு கண்கானிப்புக் குழு அமைக்கப்பட உள்ளது.
ஆட்சியர் தலைமையிலான அந்தக் குழுவில் எஸ்.பி, மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர், ஆக்சிஜன் தயாரிப்பு வல்லுநர்கள் இடம்பெறுவர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அந்தக் குழுவில் தூத்துக்குடி பொதுமக்கள், சுற்றுச்சூழல் சார்ந்த என்.ஜி.ஓ மற்றும் எதிர்ப்புக்குழு என மூன்று தரப்பிலும் ஒருவர் இடம்பெறுவர்.
நான்கு மாதங்களுக்குப் பிறகு உள்ள சூழலை பொறுத்து அனுமதியை மேலும் நீட்டிப்பது குறித்து முடிவெடுக்கப்படும் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.