30 புதிய சிறப்பு நீதிமன்றங்கள் - தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு!

Tamil nadu C. Joseph Vijay
By Vinoja Nov 01, 2026 01:28 PM GMT
Report

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களுக்கு விரைந்து நீதி கிடைப்பதையும், போதைப்பொருள் இல்லாத தமிழ்நாட்டை உருவாக்குவதையும் நோக்கமாகக் கொண்டு, புதிதாக 30 சிறப்பு நீதிமன்றங்களை அமைக்கத் தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

போக்சோ சட்டத்தின்கீழ் நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து விசாரித்து முடிப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு முதலமைச்சர் விஜய், அதிகாரிகளுக்கு ஏற்கெனவே உத்தரவிட்டிருந்தார்.

30 புதிய சிறப்பு நீதிமன்றங்கள் - தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு! | Tn Government Issues Order For Thirty New Courts

52 போக்சோ சிறப்பு நீதிமன்றங்கள்

இதுதொடர்பாக நடைபெற்ற விரிவான ஆய்வுக் கூட்டத்தில், பாலியல் குற்ற வழக்குகளின் விசாரணையை விரைவுபடுத்த வேண்டியதன் அவசியத்தையும் முதலமைச்சர் வலியுறுத்தினார்.

அதன் அடிப்படையில், 12 புதிய சிறப்பு நீதிமன்றங்கள் மற்றும் 14 கூடுதல் சிறப்பு நீதிமன்றங்கள் என மொத்தம் 26 போக்சோ சிறப்பு நீதிமன்றங்களை 46 கோடியே 59 லட்சம் ரூபாய் செலவில் அமைக்கத் தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

30 புதிய சிறப்பு நீதிமன்றங்கள் - தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு! | Tn Government Issues Order For Thirty New Courts

இதன் மூலம், தமிழ்நாட்டில் போக்சோ வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றங்களின் எண்ணிக்கை 52 ஆக உயரவுள்ளது. மாநிலம் முழுவதும் உள்ள 47 காவல் மாவட்டங்களுக்கும் சேர்த்து 52 போக்சோ சிறப்பு நீதிமன்றங்கள் செயல்பாட்டுக்கு வரவுள்ளன.

மேலும், இதுபோன்ற கொடூரமான குற்றங்கள் மீண்டும் நிகழாமல் தடுப்பதுடன், குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை பெற்றுத் தருவதையும் அரசு உறுதி செய்யும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், 'போதைப்பொருள் இல்லாத தமிழ்நாடு' என்ற இலக்கை எட்டும் வகையில், போதைப்பொருள் மற்றும் மனமயக்கப் பொருட்கள் சட்டத்தின்கீழ் பதிவு செய்யப்படும் வழக்குகளை விரைந்து விசாரிக்கவும் புதிய சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.

அதன்படி, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர் ஆகிய மாவட்டங்களில் தலா ஒரு சிறப்பு நீதிமன்றமும், சென்னையில் ஒரு கூடுதல் சிறப்பு நீதிமன்றமும் அமைக்கப்பட உள்ளதாகத் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.