இதுவரை கொரோனா நிவாரண நிதி பெறாதவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு...

Corona relief fund Tn government
By Petchi Avudaiappan May 31, 2021 03:15 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in தமிழ்நாடு
Report

தமிழக அரசின் கொரோனா நிவாரண நிதியின் முதல் தவணை ரூ.2000ஐ வாங்காதவர்கள் ஜூன் மாதத்தில் பெற்று கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் திமுக அரசு பொறுப்பேற்றவுடன், அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் கொரோனா நிவாரண நிதியாக ரூ.4000 வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்து இருந்தார்.

அதன்படி தமிழகத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதும் முதல் தவணையாக ரூ.2000 மே மாதத்திலேயே வழங்கப்பட்டது. 

இதுவரை 98% பேர் நிவாரண நிதி வாங்கியிருக்கும் நிலையில் மீதமுள்ளவர்கள் அதை ஜூன் மாதத்திலும் பெற்றுக்கொள்ளலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.