12 மணி நேர வேலை: தொழிற்சங்கங்களுடன் தமிழ்நாடு அரசு ஆலோசனை

M K Stalin Tamil nadu
By Sumathi Apr 22, 2023 09:53 AM GMT
Report

முக்கிய தொழிற்சங்கங்களுடன் அமைச்சர்கள் ஆலோசனை நடத்தவுள்ளனர்.

12 மணி நேர வேலை

ஒருநாளில் 12 மணி நேரம் வரை தொழிலாளர்கள் பணியாற்றலாம் என தொழிற்சாலை சட்டத்தில் திருத்தம் செய்து தமிழ்நாடு சட்டப்பேரவையில் மசோதா நிறைவேற்றப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுகவின் கூட்டணி கட்சிகளே சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தன.

12 மணி நேர வேலை: தொழிற்சங்கங்களுடன் தமிழ்நாடு அரசு ஆலோசனை | Tn Government Consultation Unions 12 Hour Work

மேலும், மசோதாவை திரும்பப்பெறவும் வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில், பல்வேறு தரப்பில் இருந்து எதிர்ப்பு எழுந்துள்ளதால் தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், புதிய மசோதா குறித்து முக்கிய தொழிற்சங்கங்களுடன் அமைச்சர்கள் ஆலோசனை நடத்தவுள்ளது.

ஆலோசனை

நாளை மறுநாள் மாலை 3 மணிக்கு நடைபெறும் கூட்டத்தில், பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி. கணேசன், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் ஆகியோரும், தலைமைச் செயலாளர்,

தொழிலாளர் நலத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் மற்றும் ஆணையர் உள்ளிட்டோரும் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொள்வர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.