மீனவ குடும்பங்களுக்கு மீன்பிடி தடைக்கால நிவாரணம் ரூ.5,000 வழங்க தமிழக அரசு உத்தரவு

Fishermen Subsidy Fishing Ban
By mohanelango May 23, 2021 12:46 PM GMT
Report

தமிழகத்தில் கோடை காலத்தில் மீன் வளத்தைப் பெருக்க 61 நாட்கள் மீன் பிடி தடைக்காலம் அமல்படுத்தப்படுவது வழக்கம்.

இந்த காலகட்டத்தின் மீனவர்கள் யாரும் கடலுக்குள் மீன்பிடிக்கச் செல்ல முடியாததால் அவர்களுக்கு அரசாங்கத்தில் சார்பில் உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது.

மீனவ குடும்பங்களுக்கு மீன்பிடி தடைக்கால நிவாரணம் ரூ.5,000 வழங்க தமிழக அரசு உத்தரவு | Tn Government Compensation For Fishermen Families

அந்த வகையில் இந்த ஆண்டிற்கான மீன்பிடி தடைக்கால நிவாரணத் தொகை ரு.5,000 வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதன்மூலம் தமிழகம் முழுவதும் உள்ள 1.72 லட்சம் குடும்பங்கள் பயன்பெற உள்ளனர். இதற்காக ரூ.86 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.