நாளை முதல் இரவு நேர ஊரடங்கு அமல்; இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை மக்கள் வெளியே வர அனுமதி இல்லை - தமிழக அரசு அறிவிப்பு

tamil nadu announced night curfew sunday lockdown 10 pm to 5 am
By Swetha Subash Jan 05, 2022 10:26 AM GMT
Report

தமிழகத்தில்  கொரோனா ப்ரவல் மீண்டும் வேகமெடுக்கத் தொடங்கி மக்களை மிரட்டி வருகிறது.

சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில் 1,489 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 9 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தனர். 674 பேர் சிகிச்சை முடித்துக் கொண்டு வீடு திரும்பியுள்ளனர்.

இந்த திடீர் அதிகரிப்பால் தமிழக அரசு துரித நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. ஏற்கெனவே சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட நிலையில் நேற்று தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அவசர ஆலோசனையில் ஈடுபட்டார்.

இந்நிலையில் இன்றும் முதலமைச்சர் ஸ்டாலின் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாக ஆலோசனையில் ஈடுபட்டார்.

அதனை தொடர்ந்து ஞாயிறுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல் படுத்தப்படும் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்திருந்த நிலையில்,

தற்போது தமிழ்நாட்டில் நாளை முதல் இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படும் என அறிவிப்பு

இரவு ஊரடங்கு நேரத்தில் கடைகள்,உணவகங்கள்,வணிக வளாகங்கள் செயல்பட அனுமதியில்லை. 1-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரை நேரடி வகுப்புகளுக்கு தடை.

பால்,பத்திரிகை விநியோகம், மருத்துவமனை, மருந்தகங்கள், ஆம்புலன்ஸ், அமரர் ஊர்தி, ஏடிஎம் போன்ற அவசிய பணிகளுக்கு மட்டுமே அனுமதி.   

உற்பத்தி தொழிற்சாலைகள் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் செயல்படவும் அனுமதி.

மேலும், அரசு மற்றும் தனியார் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பொங்கல் கலை விழாக்கள் ஒத்திவைப்பு.

 பணிக்கு செல்லும் ஊழியர்கள் தங்கள் நிறுவனங்களால் அளிக்கப்படும் அடையாள அட்டையை வைத்திருக்க வேண்டும். 

அனைத்து கல்வி நிலையங்களிலும் ஆன்லைன் மூலம் மட்டும் வகுப்புகள் நடத்த உத்தரவு பிறப்பிக்கப்படலாம் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கடைகளிலும் 50 சதவீத பேருக்கு மட்டுமே அனுமதி என அரசு அறிவித்துள்ளது.

பெட்ரோல்,டீசல் பங்குகள் 24 மணி நேரமும் செயல்பட அனுமதிக்கப்படும். அனைத்து கடைகளும் காலை 8 மணி முதல் இரவு 10 மணி வரை மட்டுமே திறக்கலாம் என உத்தரவு,

உணவு டெலிவரி செய்யும் வணிக நிறுவனங்கள் காலை 7 மணி முதல் இரவ 10 மணி வரை மட்டுமே இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.