தேன் குடிக்க ஆசைப்பட்டு மரப்பொந்தில் சிக்கிய கரடி - வைரல் வீடியோ உள்ளே

valparai baby bear rescue
By Petchi Avudaiappan Aug 25, 2021 11:06 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in தமிழ்நாடு
Report

 வால்பாறையில் மர இடுக்கில் சிக்கித் தவித்த கரடியை தமிழக வனத்துறை அதிகாரிகள் உயிருடன் மீட்டதற்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

கோவை மாவட்டத்தில் இயற்கை எழில் கொஞ்சும் பகுதியான வால்பாறையில் தனியாருக்கு சொந்தமான தேயிலை தோட்டங்கள் அதிகளவில் உள்ளது.

இதனால் அப்பகுதியில் வன விலங்குகள் நடமாட்டமும் அதிகமாக இருக்கும். இதனிடையே வாட்டர்பால்ஸ் எஸ்டேட் முதல் பிரிவு 10-ம் நம்பர் தேயிலை தோட்டத்தில் உள்ள மரத்தில் தேனிக்கள் கூடு கட்டியுள்ளது.

இதில் உள்ள தேனை குடிக்க கரடி ஒன்று ஆசைப்பட்டு மரத்தின் மீது ஏறியுள்ளது. அப்போது எதிர்பாராதவிதமாக கரடியின் வலதுகால் மரப் போந்தில் சிக்கியது. காலை வெளியே எடுக்க முடியாமல் அவதிப்பட்ட கரடி பயத்தில் அலறியது.

கரடியின் சத்தம் கேட்ட அப்பகுதி மக்கள் இதுகுறித்து வனத்துறைக்கு தகவல் அளித்தனர். உடனடியாக சம்பவ இடத்துக்கு வந்த வனச் சரக அதிகாரி ஜெயச்சந்திரன் தலைமையிலான வனத்துறையினர் கரடிக்கு மயக்க மருந்து ஊசியை செலுத்தி மரத்தை வெட்டி கரடியை மீட்டு காடம்பாறையில் உள்ள அடர்ந்த வனப்பகுதியில் விட்டனர்.