தொடரும் சோகம் : தமிழக மீனவர்கள் 7 பேரை கைது செய்தது இலங்கை கடற்படை

By Irumporai Oct 27, 2022 01:45 AM GMT
Report

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி தமிழக மீனவர்கள் 7 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.

தொடரும் கைது

கடலில் மீன் பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்களை எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி இலங்கை கடற்படை கைது செய்வது தொடர்கதையாகியுள்ளது.

தொடரும் சோகம் : தமிழக மீனவர்கள் 7 பேரை கைது செய்தது இலங்கை கடற்படை | Tn Fisherman Arrested By Sri Lankan Navy

. அந்த வகையில், நெடுந்தீவு அருகே தமிழக மீனவர்கள் மீன் பிடித்துக்கொண்டு இருந்த போது அவ்வழியாக ரோந்து பணிக்காக வந்த இலங்கை கடற்படை எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி 7 பேரை கைது செய்துள்ளது. 

ராமேஸ்வர மீனவர்கள்

விசாரணைக்காக காங்கேசன் துறைமுகத்திற்கு கைது செய்யப்பட்ட மீனவர்கள் கொண்டு செல்லப்பட்டுள்ளனர். இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட மீனவர்கள் ராமேஸ்வரத்தை சேர்ந்தவர்களாக இருக்கலாம் என்று முதல் கட்ட தகவல் வெளியாகியுள்ளது.