தொண்டாமுத்தூரில் வாக்கு எண்ணிக்கை நடத்த கூடாது என கோஷம்
tn election
By Fathima
தொண்டாமுத்தூர் தொகுதி வாக்கு எண்ணும் மையத்தில் தபால் வாக்குகளை கொண்டு வர தாமதம் ஆனது.
எனவே 8 மணிக்கு பின்னர் வந்த தபால் வாக்குகளை ஏற்க கூடாது எனவும், தபால் வாக்குகளில் முறைகேடு நடக்க வாய்ப்புள்ளது எனவும் முகவர்கள் வாக்கு எண்ணும் அதிகாரிகளுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
வாக்கு எண்ணிக்கை நடத்த கூடாது என கோஷம் போட்டதால் பரபரப்பானது, இதனை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் நாகராஜன் பேச்சு வார்த்தைக்கு பின்னர் 30 நிமிடம் தாமதமாக தபால் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.