ஆயிரம் விளக்கு தொகுதியில் குஷ்புக்கு தோல்வி முகமா?

election bjp tn thousand lights existpoll
By Praveen Apr 29, 2021 07:00 PM GMT
Report

சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்ட குஷ்பு தோல்வி அடைவார் என எக்ஸிட் போல் கருத்துக்கணிப்பு தெரிவித்துள்ளது.

சென்னையில் உள்ள முக்கிய தகுதிகளில் ஒன்று ஆயிரம் விளக்கு என்பதும் முக ஸ்டாலின் உள்ளிட்ட பிரபலங்கள் வெற்றி பெற்ற இந்த தொகுதியில் பாஜகவின் நட்சத்திர வேட்பாளர் குஷ்பு போட்டியிடுகிறார் என்பதும் தெரிந்ததே.

இந்த தொகுதியில் குஷ்பு நிச்சயம் வெற்றிபெறுவார் என அந்த தொகுதியில் உள்ள பலர் தெரிவித்து வரும் நிலையில் இன்று வெளியான கருத்துக் கணிப்பில் குஷ்பு தோல்வி அடைவார் என்று கூறப்பட்டுள்ளது.

 இன்று வெளியாகியுள்ள தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பில் கிட்டதட்ட அனைத்து கருத்துக்கணிப்புகளும், ஆயிரம் விளக்கு தொகுதியில் திமுக தான் வெற்றி பெறும் என்றும் குஷ்பு தோல்வியடைவார் என்றும் கூறப்பட்டுள்ளது.

கடந்த 2016ஆம் ஆண்டு வெளியான எக்ஸிட் போல் அனைத்துமே கிட்டத்தட்ட தவறான முடிவுகளையே தந்தது என்பதால் இந்த ஆண்டு வெளிவந்திருக்கும் எக்ஸிட் போல் சரியாக இருக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.