கலைஞர் நினைவிடத்தில் குடும்பத்தோடு அஞ்சலி செலுத்திய ஸ்டாலின்
திமுக தலைவர் ஸ்டாலின் தனது குடும்பத்தோடு மெரினா கடற்கரையில் உள்ள கலைஞர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார்.
தமிழக சட்டமன்ற தேர்தல் கடந்த மாதம் நடைபெற்றது. இதன் ஓட்டு எண்ணும் பணிகள் நாளை காலை எட்டு மணியளவில் தொடங்கவுள்ளன. முன்னதாக தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியாகியுள்ளன.
அதில் பெரும்பாலான கருத்துக்கணிப்புகள் திமுகவே இந்த சட்டமன்ற தேர்தலில் அதிகபடியான தொகுதிகளில் வென்று ஆட்சியைக் கைப்பற்றும் என தெரிவித்தன. இதனால் திமுகவினர் பெரும் உற்சாகத்தில் உள்ளனர்.
இந்த நிலையில் நாளை தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ள நிலையில் திமுக தலைவர் ஸ்டாலின்,உதயநிதி ஸ்டாலின் மற்றும் குடும்பத்தினர் அனைவரும் மெரினா கடற்கரையில் உள்ள கருணாநிதியின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
