முக ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்தார் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்

dmk stalin congrats aravind kejrivaal
By Praveen May 02, 2021 10:35 AM GMT
Report

திமுக தலைவர் முக ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்தார் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்.

சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில் காலை முதலே திமுக முன்னிலை பெற்று வருகிறது. தற்போது வரையில் அந்த முன்னிலை தொடர்வதால் திமுகவின் வெற்றிக் கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது.

இந்நிலையில் நிலையில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தனது டிவிட்டர் பக்கத்தில் ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அவர் டிவிட்டரில் வெளியிட்ட செய்தியில்,

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் மகத்தான வெற்றி பெற்ற ஸ்டாலினுக்கு வாழ்த்துக்கள். தமிழக மக்களின் தேவைகளை வெற்றிகரமாக நிறைவேற்றுவதற்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.