சட்டப்பேரவை தேர்தல்: 1.47 லட்சம் பேர் பாதுகாப்பு பணியில்

Election
By Fathima Apr 22, 2026 03:45 AM GMT
Report

தமிழகத்தில் ஏப்ரல் 23(நாளை) சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் பாதுகாப்பு பணியில் 1.47 லட்சம் பொலிசார் ஈடுபடவுள்ளனர்.

தமிழகத்தின் 234 தொகுதிகளுக்கும் நாளை ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறவுள்ளது, மொத்தம் 75 ஆயிரத்து 32 வாக்குசாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது, இதில் 5938 வாக்குசாவடிகள் பதற்றமானவை என அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் மிக அமைதியான முறையில் நடைபெறுவதற்காக துப்பாக்கி ஏந்திய துணை ராணுவப்படையினரும், தமிழ்நாடு சிறப்பு காவல் படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.

1.47 லட்சம் பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர், இவர்கள் தவிர ஓய்வு பெற்ற ராணுவ வீரர்கள், ஓய்வு பெற்ற காவலர், ஓய்வு பெற்ற வன காவலர் என 20,000 பேர் பாதுகாப்பு பணிக்கு வந்துள்ளனர்.

சட்டப்பேரவை தேர்தல்: 1.47 லட்சம் பேர் பாதுகாப்பு பணியில் | Tn Election 2026