1.06 லட்சம் போக்குவரத்து ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிப்பு!

Diwali Tamil nadu
By Vinoja Nov 02, 2026 02:26 PM GMT
Report

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களைச் சேர்ந்த 1,06,001 பணியாளர்களுக்கு 2025-2026 ஆம் ஆண்டுக்கான தீபாவளி போனஸ் மற்றும் கருணைத் தொகையாக ரூ.167.12 கோடி வழங்கப்பட்டுள்ளது.

முதலமைச்சர் விஜய் உத்தரவின்படி, இத்தொகை இன்று (02.11.2026) பணியாளர்களின் வங்கிக் கணக்குகளில் செலுத்தப்பட்டுள்ளதாக போக்குவரத்துத் துறை அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன் தெரிவித்துள்ளார்.

1.06 லட்சம் போக்குவரத்து ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிப்பு! | Tn Diwali Bonus Announced For Transport Department

இந்தச் சேவையில் முக்கியப் பங்காற்றும் போக்குவரத்துக் கழகப் பணியாளர்களை ஊக்குவிக்கும் வகையில் இந்த போனஸ் மற்றும் கருணைத் தொகை வழங்கப்பட்டுள்ளது.  

தமிழகத்தின் எட்டு அரசு போக்குவரத்துக் கழகங்கள் மூலம் இயக்கப்படும் 21,333 பேருந்துகள், 10,172-க்கும் மேற்பட்ட வழித்தடங்களில் தினமும் சுமார் 2.18 கோடி மக்களுக்கு போக்குவரத்துச் சேவை வழங்கி வருகின்றன.

இதில் 72 சதவீத பயணிகள் கட்டணமில்லா அல்லது சலுகைக் கட்டணத்தில் பயணிப்பது குறிப்பிடத்தக்கது.