பி.டி உஷாவின் 23 ஆண்டுகாள சாதனையை முறியடித்த தமிழக வீராங்கனை - இணையத்தில் குவியும் பாராட்டு

dhanalakshmi dhanalakshmibeatsptusha ptusharecordbroken fedcup nationalathleticchamp
By Swetha Subash Mar 16, 2022 07:36 AM GMT
Report

திருச்சி குண்டூரை சேர்ந்த 24 வயதான தனலட்சுமி திருச்சி தடகள சங்கத்தின் சார்பில் பயிற்சி பெற்று சிவகாசியில் நடந்த மாநில அளவிலான வீரர்கள் தேர்வில் கலந்து தமிழக அணிக்கு தேர்வானார்.

இதனை தொடர்ந்து அகில இந்திய தடகள சம்மேளனம் சார்பில் கடந்த 15-ம் தேதி முதல் 19-ம் தேதி வரை பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவில் நடந்த தேசிய அளவிலான தடகள போட்டியில் பங்கேற்றார்.

இந்நிலையில் தனலட்சுமி 200 மீட்டர் ஓட்டத்தில் அரையிறுதி தேர்வில் 23.26 வினாடிகளில் கடந்து சாதனை படைத்தார்.

இதற்கு முன்பு 1998-ம் ஆண்டு 200 மீட்டர் ஓட்டத்தில் பி.டி உஷா 23.30 வினாடிகளில் கடந்தது சாதனையாக இருந்து வந்த நிலையில் இதுவரை யாரும் அவரின் சாதனையை முறியடிக்கவில்லை.

தற்போது 23 ஆண்டுகளுக்கு பிறகு பி.டி.உஷா நிகழ்த்திய சாதனையை தமிழகத்தை சேர்ந்த தனலட்சுமி முறியடித்துள்ளார்.

பி.டி உஷாவின் 23 ஆண்டுகாள சாதனையை முறியடித்த தமிழக வீராங்கனை - இணையத்தில் குவியும் பாராட்டு | Tn Dhanalakshmi Breaks Pt Usha 23 Year Record

மேலும், 19-ம் தேதி நடந்த இறுதிப் போட்டியில் 23.39 வினாடிகளில் கடந்து தனலட்சுமி வெள்ளி பதக்கம் வென்றார். இந்த போட்டிகளில் வென்றதையடுத்து சர்வதேச போட்டிகளில் விளையாடும் தகுதியை இவர் பெற்றுள்ளார்.

இவருக்கும் இவருடன் பங்கேற்ற மற்ற வீரர்களுக்கும் பல்வேறு தரப்பினர் தங்களது பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர். மேலும் ரயில் மூலம் திருச்சி வரும் இவர்களுக்கு திருச்சி தடகள சங்கத்தின் சார்பில் இன்று சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட உள்ளது.