தமிழகத்தில் குறையும் கொரோனா பாதிப்பு - இன்றைய முழு நிலவரம்

Tn government Covid status Tn health ministry
By Petchi Avudaiappan Jul 19, 2021 01:35 PM GMT
Report

தமிழகத்தில் இன்று 1,971 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதன்மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 25,37,373 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல் கொரோனாவால் 28 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதன்மூலம் இதுவரை கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 33,752 ஆக உள்ளது. மேலும் 2,558 பேர் கொரோனா சிகிச்சை முடிந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

இதனால் தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 24,76,339 ஆக உயர்ந்துள்ளது.

அதிகபட்சமாக கோவையில் 209 பேருக்கும், ஈரோட்டில் 122 பேருக்கும், சென்னையில் 147 பேருக்கும், சேலத்தில் 136 பேருக்கும், தஞ்சாவூரில் 108 பேருக்கும், கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.