ஒரேநாளில் 3,211 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

Covid 19
By Petchi Avudaiappan Jul 08, 2021 03:47 PM GMT
Report

தமிழகத்தில் ஒரேநாளில் 3,211 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதன்மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 25,10,059 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல் கொரோனா பாதிப்பால் இன்று 57 பேர் உயிரிழந்துள்ளனர்.

 இதுவரை கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 33,253 ஆக உள்ளது. மேலும் 3,565 பேர் கொரோனா சிகிச்சை முடிந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

இதனால் தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 24,43,141 ஆக உயர்ந்துள்ளது.

அதிகபட்சமாக கோவையில் 366 பேருக்கும், ஈரோட்டில் 251 பேருக்கும், சேலத்தில் 205 பேருக்கும், தஞ்சாவூரில் 190 பேருக்கும், திருப்பூரில் 185 பேருக்கும், சென்னையில் 189 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.