தமிழகத்தில் ஒரே நாளில் 3,367 பேருக்கு கொரோனா பாதிப்பு!
Covid19
Tn government
Tn health ministry
By Petchi Avudaiappan
தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 3,367 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. அதன்படி இன்று ஒரே நாளில் 3,367 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.அதன்மூலம் மொத்த பாதிப்பு 25,06,848 பேராக அதிகரித்துள்ளது.
அதேபோல் கொரோனா பாதிப்பால் இன்று மட்டும் 64 பேர் உயிரிழந்துள்ளனர். அதன்மூலம் மொத்த உயிரிழப்பு 33,196 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் தற்போது 34,076 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அதிகபட்சமாக கோவையில் 385 பேருக்கும், ஈரோட்டில் 288 பேருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.