தமிழகத்தில் புதிதாக 4,512 பேருக்கு கொரோனா தொற்று உறுதி...

Covid positive Tn health ministry
By Petchi Avudaiappan Jun 29, 2021 04:36 PM GMT
Report

 தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 4,512 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

தமிழகத்தில்கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை கடந்த சில நாட்களாக தொடர்ந்து குறைந்து வருகிறது.அந்த வகையில் தமிழக சுகாதாரத்துறை இன்று வெளியிட்ட தகவலின்படி, தமிழகத்தில் இன்று புதிதாக 4,512 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இதன்மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 24,75,190 ஆக அதிகரித்துள்ளது. 

அதேபோல்இன்று மட்டும் 118 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் இதுவரை கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 32,506 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 6,013 பேர் கொரோனா சிகிச்சை முடிந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

இதனால் தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 24,03,349 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் தற்போது 39,335 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவது குறிபிடத்தக்கது.