தமிழகத்தில் ஒரேநாளில் கொரோனாவுக்கு 113 பேர் உயிரிழப்பு - இன்றைய பாதிப்பு நிலவரம்

Covid positive
By Petchi Avudaiappan Jun 30, 2021 03:12 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in ஆரோக்கியம்
Report

 தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 4,506 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இதன்மூலம்கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 24,79,696 ஆக அதிகரித்துள்ளது. அதேசமயம் இன்று ஒரே நாளில் 113 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 32,619 ஆக அதிகரித்துள்ளது.

5,537 பேர் கொரோனா சிகிச்சை முடிந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 24,08,886 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் தொடர்ந்து கொரோனா பாதிப்பு குறைந்து வருவது குறிப்பிடத்தக்கது.