தமிழகத்தில் 1,808 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி...!

Tn health ministry Corona status
By Petchi Avudaiappan Jul 25, 2021 02:48 PM GMT
Report

 தமிழகத்தில் ஒரேநாளில் 1,808 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதன்மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 25,48,497 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல் கொரோனா பாதிப்பால் இன்று 22 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதன்மூலம் இதுவரை கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 33,911 ஆக உள்ளது. மேலும் 2,447 பேர் கொரோனா சிகிச்சை முடிந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

இதனால் தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 24,91,222 ஆக உயர்ந்துள்ளது.

அதிகபட்சமாக கோவையில் 169 பேருக்கும், ஈரோட்டில் 130 பேருக்கும், சென்னையில் 126 பேருக்கும், சேலத்தில் 105 பேருக்கும், தஞ்சாவூரில் 98 பேருக்கும், கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.