கொரோனா ஹாட்ஸ்பாடாக மாறும் ஐஐடி : மேலும் 26 பேருக்கு தொற்று
தற்போது சென்னை ஐஐடி மெட்ராஸ் கொரோனா தொற்று அதிகரித்து அங்கு மேலும் 26 பேருக்கு வைரஸ் தொற்று உறுதியானதை அடுத்து, எண்ணிக்கை 171 ஐ எட்டியது. சென்னை ஐஐடியில் இதுவரை 171 கோவிட்-19 தொற்று பாதிப்புகள் பதிவாகியுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ஜே ராதாகிருஷ்ணன் நேற்று செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் தெரிவித்தார்.
ஐஐடி மெட்ராஸ் கல்லூரி தற்போது மூடப்படவில்லை என்று சுகாதார செயலாளர் தெரிவித்தார், இருப்பினும், கோவிட் தொற்று அதிகம் உள்ள பகுதிகளில் இருந்து, பல்கலைக்கழகத்தின் மற்ற இடங்களுக்கு பரவாமல் இருப்பதை உறுதி செய்ய அரசு மற்றும் கல்லூரி வளாக அதிகாரிகளுடன் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும், "ஐஐடி மெட்ராஸில் மேலும் சில வழக்குகள் பதிவாகியுள்ளன. எனினும் பயப்பட ஒன்றுமில்லை. நாங்கள் கல்லூரியை மூடவில்லை. கோவிட் கிளஸ்டர் மற்ற இடங்களுக்கு பரவாமல் இருப்பதை நாங்கள் உறுதிசெய்கிறோம். " என அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதற்கிடையில், ஐஐடி மெட்ராஸ் அதிகாரிகள், கோவிட்-19 தொடர்பான அறிகுறிகள் ஏதேனும் இருந்தால், தங்களை உடனடியாக பரிசோதிக்குமாறு கேட்டுக் கொண்டனர், மேலும் அனைவரும் மாஸ்குகள் அணியவும், சமூக இடைவெளியை பராமரிக்கவும் மற்றும் அனைத்து கோவிட்-19 பாதுகாப்பு நெறிமுறைகளைப் பின்பற்றவும் வேண்டும் என அறிவுறுத்தியுள்ளனர்.