தமிழகத்தில் வேகமாக குறையும் கொரோனா பாதிப்பு - இன்றைய முழு நிலவரம்

Tn government Corona status
By Petchi Avudaiappan Jul 28, 2021 04:02 PM GMT
Report

 தமிழகத்தில் ஒரேநாளில் 1,756 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதன்மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 25,53,805 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல் கொரோனா பாதிப்பால் இன்று 29 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதன்மூலம் இதுவரை கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 33,995 ஆக உள்ளது. மேலும் 2,394 பேர் கொரோனா சிகிச்சை முடிந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

இதனால் தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 24,98,289 ஆக உயர்ந்துள்ளது.

அதிகபட்சமாக கோவையில் 179 பேருக்கும், ஈரோட்டில் 140 பேருக்கும், சென்னையில் 164 பேருக்கும், சேலத்தில் 92 பேருக்கும், தஞ்சாவூரில் 78 பேருக்கும், கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.