தமிழகத்தில் 1,872 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி...!

Covid 19 Tn government
By Petchi Avudaiappan Jul 22, 2021 03:16 PM GMT
Report

 தமிழகத்தில் ஒரேநாளில் 1,872 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 25,43,040 ஆக அதிகரித்துள்ளது.

அதேபோல் கொரோனாவால் 29 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் இதுவரை கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 33,838 ஆக உள்ளது.

மேலும் 2,475 பேர் கொரோனா சிகிச்சை முடிந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 24,83,676 ஆக உயர்ந்துள்ளது.

அதிகபட்சமாக கோவையில் 180 பேருக்கும், ஈரோட்டில் 137 பேருக்கும், சென்னையில் 133 பேருக்கும், சேலத்தில் 113 பேருக்கும், தஞ்சாவூரில் 102 பேருக்கும், கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.