தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை மாற்றமா?

K. Selvaperunthagai
By Fathima Apr 27, 2026 05:28 AM GMT
Report

சட்டப்பேரவை தேர்தல் முடிவு வெளியான பின்னர் தமிழக காங்கிரஸ் தலைவர் மாற்றப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை கடந்த 2024ம் ஆண்டு நியமிக்கப்பட்டார், தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியின் உள்கட்டமைப்பை வலுப்படுத்தும் நோக்கில் நியமிக்கப்பட்டிருப்பதாக கூறப்பட்டது.

ஆனால் தொடர்ந்து தொண்டர்களின் விருப்பத்திற்கு மாறாக செயல்பட்டு வருவதாக டெல்லி தலைமைக்கு புகார்கள் சென்ற வண்ணம் இருந்தது.

தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை மாற்றமா? | Tn Congress Leader Changed

இருப்பினும் தலைவர் மல்லிகார்ஜுனா கார்கே வின் ஆதரவு இருந்ததால் பதவிக்கு எந்த சிக்கலும் இல்லை என கூறப்பட்டாலும் தேர்தல் முடிவு வெளியான பின்னர் தலைவர் மாற்றப்படலாம் என தகவல்கள் கூறுகின்றன.

ஏற்கனவே சட்டப்பேரவை தேர்தலில் அதிகளவான தொகுதிகளை கேட்டு பெற வேண்டும் என ராகுல்காந்தி விரும்பியதாகவும், ஆட்சியிலும் பங்கு வேண்டும் என கேட்டதாகவும் தகவல்கள் வெளியாகின.

கூட்டணியை விட்டே காங்கிரஸ் விலகலாம் என தகவல்கள் பரவிய நிலையில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ப. சிதம்பரம் திமுக தலைமையிடம் சுமூகமான பேச்சு வார்த்தை நடத்தி கூட்டணியை உறுதி செய்தார்.

தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை மாற்றமா? | Tn Congress Leader Changed

இதன் காரணமாகவும், வேட்பாளர் தெரிவில் தனது ஆதரவாளர்களுக்கு செல்வ பெருந்தகை முன்னுரிமை வழங்கியதாகவும் டெல்லி தலைமைக்கு புகார் சென்றுள்ளது.

மிக முக்கியமாக பரப்புரையின் போது ராகுல்காந்தி பேசியதை தவறாக மொழிபெயர்த்த காரணத்தினாலும் தொடர்ச்சியான புகார்களினாலும் மாற்றப்படலாம்.

புதிய இளம் நபரை காங்கிரஸ் தலைமை கொண்டு வரலாம் எனவும் கூறப்படுகிறது.