சிலர் டுவிஸ்ட் பண்ணி பேசுறாங்க.. ஆனால் உண்மை இதுதான் - முதல்வர் விளக்கம்!

M K Stalin Tamil nadu Chennai
By Swetha Oct 16, 2024 01:30 PM GMT
Report

 மழைநீர் வடிகால் பணிகள் கைகொடுத்துள்ளன என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

ஸ்டாலின் 

சென்னை கிண்டி குதிரைப்பந்தய மைதானத்தில், ஏற்படுத்தப்பட்டுள்ள நீர்நிலையை முதல்வர் ஸ்டாலின் ஆய்வு செய்தார். பிறகு பள்ளிக்கரணை அருகே நாராயணபுரம் ஏரியில் முதல்வர் ஸ்டாலின் ஆய்வு செய்தார்.

சிலர் டுவிஸ்ட் பண்ணி பேசுறாங்க.. ஆனால் உண்மை இதுதான் - முதல்வர் விளக்கம்! | Tn Cm Stalin Press Meet In Pallikaranai

முதல்வருடன் அமைச்சர்கள் கே.என். நேரு, மா.சுப்பிரமணியன் உடன் இருந்தனர். அப்போது செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள் நல்ல முறையில், கை கொடுத்திருக்கிறது.

திருப்புகழ் ஐ.ஏ.எஸ்., குழு அளித்த பரிந்துரைகளை தமிழக அரசு படிப்படியாக நிறைவேற்றி வருகிறது. ஒரே நேரத்தில் முழுமையாக நிறைவேற்ற முடியாது. மழைநீர் வடிகால், பணிகளில் 30 சதவீதம் பாக்கி இருக்கிறது.

வரும் காலத்தில் அதுவும் நிறைவு பெறும்.விரைவில் நிரந்தர தீர்வு கிடைக்கும். வெள்ள பாதிப்பில் இருந்து சென்னை மக்களுக்கு விரைவில் நிரந்தர தீர்வு கிடைக்கும். சில பேர் TWIST பண்ணி சொல்லிட்டு இருக்காங்க...

கொட்டும் மழையிலும் டாஸ்மாக் திறப்பது தான் திராவிட மாடல் சேவையா? அன்புமணி கேள்வி!

கொட்டும் மழையிலும் டாஸ்மாக் திறப்பது தான் திராவிட மாடல் சேவையா? அன்புமணி கேள்வி!

விளக்கம்

நாங்கள் செய்ததை மக்களிடம் சென்று கேளுங்கள். சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள் நல்ல முறையில் கை கொடுத்திருக்கிறது. மழைநீர் வடிகால் பணிகள் முழுமையாக நிறைவு பெற்றால்,

சிலர் டுவிஸ்ட் பண்ணி பேசுறாங்க.. ஆனால் உண்மை இதுதான் - முதல்வர் விளக்கம்! | Tn Cm Stalin Press Meet In Pallikaranai

சென்னை மக்களுக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும். அதுவும் விரைவில் நிறைவு பெறும். சென்னையில் மழை பாதிப்புகளை சமாளிப்பதற்காக 3 மாதங்களாக நடவடிக்கை எடுத்து வந்தோம்.

முழுவீச்சில் மீட்புப் பணிகளில் ஈடுபட்ட தூய்மை பணியாணியாளர்கள், அதிகாரிகள் மற்றும் அலுவலர்களுக்கு நன்றி தெரிவிக்கிறேன். பல்வேறு துறை அதிகாரிகள் முழுவீச்சாக பணிகளில் ஈடுபட்டனர். என்று தெரிவித்துள்ளார்