காயிதே மில்லத் பிறந்தநாள் - முதலமைச்சர் ஸ்டாலின் மரியாதை
தேசபக்தி மிக்கவரான காயிதே மில்லத்தின் 127-வது பிறந்தநாளை முன்னிட்டு, அவரது நினைவிடத்தில் தமிழக அரசின் சார்பில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.
காயிதே மில்லத்
காயிதே மில்லத்தின் 127-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, சென்னை திருவல்லிக்கேணி வாலாஜா பெரிய பள்ளிவாசல் வளாகத்தில் உள்ள அவரது நினைவிடத்தில் தமிழக அரசு சார்பில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்ப் போர்வை போர்த்தி மரியாதை செலுத்தினார்.

கட்சி தலைவர்கள் மரியாதை
அவருடன் அமைச்சர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள், உயர் அதிகாரிகள் உள்ளிட்டவர்கள் மரியாதை செலுத்தினர்.
அதேபோல அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் திரளான கட்சிக்காரர்களுடன் வந்திருந்து மரியாதை செலுத்தினார்.
பல்வேறு கட்சிகளின் தலைவர்களும் பல்வேறு இயக்கங்களைச் சேர்ந்தவர்களும்
காயிதே மில்லத் நினைவிடத்தில் மலர் போர்வை போர்த்தி மரியாதை செலுத்தினர்