தோற்கடித்ததற்கு பழிவாங்குவதில் குறியாக இருக்க வேண்டாம் - மோடிக்கு ஸ்டாலின் அட்வைஸ்!

M K Stalin Tamil nadu Narendra Modi Budget 2024
By Swetha Jul 24, 2024 12:30 PM GMT
Report

பழிவாங்குவதில் குறியாக இருக்க வேண்டாம் என முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

ஸ்டாலின் 

2024 - 2025ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில் தமிழ்நாடு உள்பட காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கூட்டணி கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்கு எந்த சிறப்பு நிதியும் ஒதுக்கப்படவில்லை என்ற குற்றசாட்டு எழுந்தது.

தோற்கடித்ததற்கு பழிவாங்குவதில் குறியாக இருக்க வேண்டாம் - மோடிக்கு ஸ்டாலின் அட்வைஸ்! | Tn Cm Stalin Advices Modi To Not To Take Revenge

குறிப்பாக பாஜக கூட்டணி கட்சிகளான ஆந்திரா மற்றும் பீகாருக்கு மட்டுமே அதிகளவில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக எதிர் கட்சிகள் குற்றசாட்டை முன்வைத்துள்ளனர். இதனையடுத்து மத்திய பட்ஜெட்டை எதிர்த்து இன்று நாடாளுமன்ற வளாகத்தில் இந்தியா கூட்டணி எம்.பிக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த கேரண்டிகளைத் தருவீர்களா? பிரதமர் மோடிக்கு, மு.க.ஸ்டாலின் சரமாரி கேள்விகள்!

இந்த கேரண்டிகளைத் தருவீர்களா? பிரதமர் மோடிக்கு, மு.க.ஸ்டாலின் சரமாரி கேள்விகள்!

மோடிக்கு அட்வைஸ்

இது தொடர்பான வீடியோவை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “ஒன்றிய நிதிநிலை அறிக்கையில் ஒருசில மாநிலங்கள் நீங்கலாகப் பல்வேறு மாநிலங்கள் புறக்கணிக்கப்பட்டிருப்பதைக் கண்டிக்கும் வகையில் இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் போராட்டம் நடத்தியுள்ளார்கள்.

தோற்கடித்ததற்கு பழிவாங்குவதில் குறியாக இருக்க வேண்டாம் - மோடிக்கு ஸ்டாலின் அட்வைஸ்! | Tn Cm Stalin Advices Modi To Not To Take Revenge

மாண்புமிகு பிரதமர் நரேந்திர மோடி அவர்களே… “தேர்தல் முடிந்துவிட்டது, இனி நாட்டைப் பற்றியே சிந்திக்க வேண்டும்” என்று சொன்னீர்கள். ஆனால், நேற்றைய #Budget2024 உங்கள் ஆட்சியைக் காப்பாற்றுமே தவிர, இந்திய நாட்டைக் காப்பாற்றாது! அரசைப் பொதுவாக நடத்துங்கள்.

இன்னமும் தோற்கடித்தவர்களைப் பழிவாங்குவதில் குறியாக இருக்க வேண்டாம். அரசியல் விருப்பு வெறுப்புகளுக்கேற்ப அரசை நடத்தினால், தனிமைப்பட்டுப் போவீர்கள் என அறிவுறுத்தக் கடமைப்பட்டுள்ளேன்” என தெரிவித்துள்ளார்.