உண்மை கிலோ என்ன விலை? என கேட்பார் பிரதமர் மோடி - முதல்வர் ஸ்டாலின் கடும் கண்டனம்!

M K Stalin Tamil nadu Narendra Modi India
By Swetha May 18, 2024 05:30 AM GMT
Report

பிரதமர் நரேந்திர மோடியின் இலவச பேருந்து திட்டம் விமர்சனத்துக்கு முதல்வர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடி 

நடப்பாண்டின் மக்களவை தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் முதல் 4 கட்டங்கள் நடந்து முடிந்த நிலையில், தற்போது 5 வது கட்டம் நடக்க இருக்கிறது. இதனால், தமிழகத்தில் அரசு மற்றும் அரசியல் நடவடிக்கைகள் இருக்காது. கடந்த ஒரு மாதமாக தமிழகத்தில் அரசியல் பரபரப்பு நிகழ்வுகள் எதுவும் அரங்கேறாமல் இருந்தது.

உண்மை கிலோ என்ன விலை? என கேட்பார் பிரதமர் மோடி - முதல்வர் ஸ்டாலின் கடும் கண்டனம்! | Tn Cm Mkstalin Condemnation Of Pm Modi

அந்த வகையில், சமீபத்தில் பிரதமர் மோடி ஒரு பேட்டியில் பெண்களுக்கு இலவச பஸ் பயணத் திட்டத்தை குறித்து கடுமையாக விமர்சித்து இருந்தார். அவர் கூறியதாவது, ,'சில அரசியல் கட்சிகள் பெண்களுக்கு இலவச பஸ் பயண திட்டத்தை அளித்துள்ளன. இதனால், மெட்ரோ ரயில் பயணியரின் எண்ணிக்கை சரிந்துள்ளது' என்றார்.

இதனால் அரசியல் காலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மோடியின் இந்த உரையாடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலடி கொடுத்து அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளார். அதில், வெற்றி முகத்தை நோக்கி I.N.D.I.A கூட்டணி பீடுநடை போடுவதால், தோல்வி பயத்தில்,

இங்கே பாஜக தான் ஜெயிக்கும் என பிரதமரை யாரோ ஏமாத்தியிருக்காங்க - முதல்வர் தாக்கு!

இங்கே பாஜக தான் ஜெயிக்கும் என பிரதமரை யாரோ ஏமாத்தியிருக்காங்க - முதல்வர் தாக்கு!

ஸ்டாலின் கண்டனம்

பிரதமர் பதவியின் கண்ணியத்தை மறந்துவிட்டு நாளொரு பொய்ப் பரப்புரையை பேசி வருகிறார் பிரதமர் மோடி பிரதமரின் பொறுப்பற்ற பேச்சுகளையும் - அதனைத் தடுக்க வேண்டிய தேர்தல் ஆணையத்தின் அமைதியையும் நாட்டு மக்கள் அதிர்ச்சியோடும் வேதனையோடும் பார்த்து வருகிறார்கள் மதவெறுப்புப் பரப்புரை கைகொடுக்காததால்,

உண்மை கிலோ என்ன விலை? என கேட்பார் பிரதமர் மோடி - முதல்வர் ஸ்டாலின் கடும் கண்டனம்! | Tn Cm Mkstalin Condemnation Of Pm Modi

அடுத்ததாக மாநிலங்களுக்கு இடையே மோதலைத் தூண்டும் மலிவான உத்தியைப் கையில் எடுத்திருக்கிறார்.உத்தரப் பிரதேச மக்களைத் தமிழ்நாடு உள்ளிட்ட தென்மாநிலத் தலைவர்கள் அவதூறாகப் பேசுவதாகத் தன்னுடைய கற்பனைக் கதைகளை - பொய் மூட்டைகளைக் கட்டவிழ்க்கத் தொடங்கியுள்ளார் .

பிரதமர் பேசுவதைக் கவனித்தால் “உண்மை கிலோ என்ன விலை?” என்று கேட்பார் என தோன்றுகிறது பாஜகவின் பிளவுவாதக் கனவுகள் ஒருபோதும் பலிக்காது; பொய்மை உடைபட்டு, வெறுப்பு அகலும்! இந்தியா வெல்லும் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.