17 நாட்கள் அமெரிக்காவில் தங்கும் முதல்வர் ஸ்டாலின் - என்ன காரணம்?
முதல்வர் ஸ்டாலின் 17 நாட்கள் அமெரிக்க சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளார்.
முதல்வர் ஸ்டாலின்
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆகஸ்ட் 27 ஆம் தேதி அமெரிக்கா சென்று அங்கே தங்கியிருந்து முதலீட்டாளர்களை சந்திக்கவுள்ளார். இதற்காக மத்திய அரசிடம் அனுமதி கோரப்பட்டிருந்த நிலையில், முறைப்படி அனுமதி வழங்கியுள்ளது.
தொடர்ந்து, பயணத் திட்டத்திற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. அதன்படி, சந்தித்து பேசுகிறார். ஆகஸ்ட் 28 ஆம் தேதி முதல் செப்டம்பர் 2 ஆம் தேதி வரையில் சான் பிரான்சிஸ்கோ நகரில் முன்னணி நிறுவன தலைவர்களை முதல்வர் ஸ்டாலின் சந்திக்கிறார்.
அமெரிக்கா பயணம்
முன்னணி நிறுவனங்களுடன் ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளன. மேலும், அங்கு கூகுள் நிறுவன சி.இ.ஓ சுந்தர் பிச்சை, மைக்ரோசாப்ட் நிறுவன உரிமையாளர் பில்கேட்ஸ் மற்றும் மைக்ரோசாஃப்ட் நிறுவன அதிகாரிகளையும் சந்திக்க உள்ளதாக கூறப்படுகிறது.
அதன்பின், ஆகஸ்ட் 29 ஆம் தேதி சான்பிரான்சிஸ்கோவில் நடைபெறும் முதலீட்டார்கள் மாநாட்டில் பங்கேற்று பேசவுள்ளார். ஆகஸ்ட் 31 ஆம் தேதி அமெரி்க்காவில் வசிக்கும் புலம்பெயர்ந்த தமிழர்களையும், தொழிலதிபர்களையும் சந்தித்து கலந்துரையாடுகிறார்.
இந்த பயணத்தில் மு.க.ஸ்டாலின் உடன் அவரது மனைவி துர்கா ஸ்டாலின், தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, முதல்வரின் செயலாளர்கள், தொழில் துறை செயலாளர் மற்றும் பல்வேறு உயரதிகாரிகள் உடன் செல்ல உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.