பொதுமக்களோடு வரிசையில் சென்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாக்கு செலுத்தினார்

cmmkstalincastedvoteintheynampet tnurbanlocalbodyelections2022 tnelectionsmkstalin mkstalindurgastalin
By Swetha Subash Feb 19, 2022 05:45 AM GMT
Report

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மனைவி துர்கா ஸ்டாலினுடன் பொதுமக்களோடு வரிசையில் சென்று தனது வாக்கினை பதிவு செய்தார்

தமிழ்நாட்டில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 490 பேரூராட்சிகளில் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

காலை 7 மணி முதலே தொடங்கப்பட்ட வாக்குப்பதிவில் மக்கள் அனைவரும் ஆர்வத்துடன் வந்து வாக்கு செலுத்தி வருகின்றனர்.

அரசியல் கட்சி தலைவர்கள், சினிமா பிரபலங்கள் என அனைவரும் தங்களது ஜனநாயக கடைமையை ஆற்றி வருகின்றனர்.

இந்நிலையில், சென்னை தேனாம்பேட்டை எஸ்ஐஇடி கல்லூரியில் உள்ள வாக்குச்சாவடியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மனைவி துர்கா ஸ்டாலினுடன் பொதுமக்களோடு வரிசையில் சென்று தனது வாக்கினை பதிவு செய்தார்.

பொதுமக்களோடு வரிசையில் சென்று  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாக்கு செலுத்தினார் | Tn Cm Mk Stalin Casted Vote In Theynampet

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,

“ஜனநாயக கடமைப்படி எனது வாக்கை செலுத்தியிருக்கிறேன். அரசின் திட்டங்களை உள்ளாட்சி அமைப்புகளின் மூலம்தான் செயல்படுத்த முடியும்.

உள்ளாட்சித் தேர்தலில் அனைவரும் வாக்களிக்க வேண்டும்” என்றும் கூறினார்.

கோவையில் ராணுவத்தை வரவழைக்கக்கூடிய வகையில் எந்த சம்பவமும் நடைபெறவில்லை என்று தெரிவித்த முதலமைச்சர்,

தோல்வியை மறைக்கவே, கோவையில் அதிமுகவினர் போராட்டம் என்ற நாடகத்தை நடத்தியுள்ளதாக தெரிவித்தார். மேலும், 21 மாநகராட்சிகளிலும் திமுக அணிதான் வெற்றி பெறும் எனவும் கூறினார்.