தமிழக முதல்வருடன் மேற்கு வங்க முதல்வர் உரையாடல்
எதிர்கட்சி முதலமைச்சர்கள் கூட்டம்
மேற்கு வங்க ஆளுநர் சட்டமன்றத்தை முடக்கிய விவகாரத்தில் தமிழக முதலமைச்சருடன் மேற்குவங்க முதலமைச்சர் மம்தா தொலைபேசியில் உரையாடல் செய்துள்ளார்.
அரசியலமைப்பு சட்டத்தின், 174வது பிரிவு வாயிலாக ஆளுநருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தை பயன்படுத்தி, மேற்கு வங்க சட்டசபையை பிப்ரவரி 12முதல் முடக்கி வைக்கஉத்தரவிட்டுள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
மேற்கு வங்க சட்டமன்றத்தை முடக்கிய அம்மாநில ஆளுநரின் செயலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில்,
‘மேற்கு வங்க ஆளுநர் சட்டமன்ற கூட்டத்தொடரை ஒத்திவைத்த செயல், உயர்ந்த பதவியில் இருந்து எதிர்பார்க்கப்படும் எந்த உரிமையும் இல்லாமல், நிறுவப்பட்ட விதிமுறைகள் மற்றும் மரபுகளுக்கு எதிரானது.
அரசமைப்புச் சட்டத்தை நிலைநிறுத்த மாநிலத்தின் முக்கிய தலைவர் முன்மாதிரியாக இருக்க வேண்டும். ஒருவருக்கொருவர் பரஸ்பர மரியாதை கொடுப்பதில்தான் ஜனநாயகத்தின் அழகு இருக்கிறது’ எனப் பதிவிட்டுள்ளார்.
இந்த டுவிட்டருக்கு பலரும் பதில் கருத்து வரும் வேளையில் மேற்கு வங்க ஆளுநரும் தமிழக முதலமைச்சருக்கு விளக்கம் அளிக்கும் வகையில் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
‘மேற்கு வங்க மாநிலத்தின் கோரிக்கையை ஏற்றுதான் சட்டப்பேரவை முடக்கப்பட்டு உள்ளது என்றும் மேற்கு வங்க அரசு கேட்டுக் கொண்டதை அடுத்தே சட்டசபை முடக்கப்பட்டது என்றும்
தமிழக முதல்வரின் கடுமையான குற்றச்சாட்டில் எந்தவித உண்மையும் இல்லை என்றும் தெரிவித்துள்ளது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் ட்விட்டர் பதிவை இணைத்து அவர் வெளியிட்ட பதிவில், தமிழ்நாடு முதல்வரின் கவனத்திற்கு இதை கொண்டு வர விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார்.
கடந்த நவம்பர் 17ஆம் தேதி நிறைவடைந்த பேரவைக் கூட்டத் தொடரை முடித்து வைக்க இம்மாதம் 11ஆம் தேதி மேற்கு வங்க அரசு கோரிக்கை விடுத்ததாகவும் அதன்படி 12ஆம் தேதி அறிவிப்பு வெளியிட்டதாகவும் ஜகதீஷ் தங்கர் விளக்கமளித்துள்ளார்.
இது சம்பந்தமாக தமிழக முதல்வர் ஸ்டாலினுடன் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி தொலைபேசியில் பேசியுள்ளார்.
அப்போது அவர், ``பாஜக ஆட்சியில்லாத மாநிலங்களில் ஆளுநர்கள் அரசியலமைப்பு சட்டத்தை மீறுகின்றனர்” என்று தெரிவித்துள்ளதாகவும் எதிர்கட்சி முதல்வர்களின் கூட்டத்தை கூட்ட ஆலோசனையும் வழங்கியுள்ளதாகவும் தெரிகிறது
இதற்கு , `மாநில சுயாட்சியை உறுதிபடுத்த திமுக துணை நிற்கும்’ என தமிழக முதலமைச்சர் உறுதியளித்துள்ளார்.