முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் ராஜினாமா ஏற்பு - ஆளுநர் மாளிகை தகவல்
சட்டசபை தேர்தலில் அதிமுக கூட்டணி 75 இடங்களை பெற்று தோல்வியை தழுவியதால், எடப்பாடி பழனிசாமி தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியின் ராஜினாமா ஏற்பு: ஆளுநர் மாளிகை தகவல் எடப்பாடி பழனிசாமி தமிழக சட்டசபை தேர்தல் வாக்கு எண்ணிக்கை நேற்று நடைபெற்றது. 234 தொகுதிகளுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று மாலை தேர்தல் ஆணையத்தால் வெளியிடப்பட்டது.
இதில் அதிமுக கூட்டணி 75 இடங்களில் வெற்றி பெற்று தோல்வியை சந்தித்தது. அதிமுக தனிப்பட்ட முறையில் 65 இடங்களில் வெற்றி பெற்றது. இதனால் முதலமைச்சராக இருக்கும் எடப்பாடி பழனிசாமி தோல்வியை ஒப்புக்கொண்டு ஆளுநருக்கு முதலமைச்சர் பதவி ராஜினாமா செய்வதற்கான கடிதத்தை வழங்கினார்.
இந்த நிலையில் அவருடைய ராஜினாமா கடிதம் ஏற்கப்பட்டதாக ஆளுநர் மாளிகை தகவல் தெரிவித்துள்ளது.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ராஜினாமா செய்ததால், சட்டசபை கலைக்கப்பட்டதாகவும் ஆளுநர் மாளிகை தகவல் வெளியிட்டுள்ளது.