இன்று தமிழக பட்ஜெட்:அனைத்து துறை செயலாளர்களுக்கும் போடப்பட்ட உத்தரவு என்ன தெரியுமா?

chennai chiefsecretary tnchiefsecretary
By Irumporai Mar 18, 2022 03:55 AM GMT
Report

2022-23 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை இன்று காலை 10 மணிக்கு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தலைமை செயலக வளாகத்தில் அமைந்துள்ள பேரவை மண்டபத்தில் தாக்கல் செய்கிறார்.

இந்த பட்ஜெட்டில், பல்வேறு புதிய அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது, இந்நிலையில்,தமிழக அரசின் பட்ஜெட் கூட்டத்தொடரை முன்னிட்டு அனைத்து துறை செயலாளர்களும் சென்னையிலேயே இருங்க வேண்டும் எனவும்,துறை செயலாளர்கள் அனைவரும் வெளியூர் பயணத்தை தவிர்க்க வேண்டும் எனவும் தலைமைச் செயலாளர் இறையன்பு உத்தரவிட்டுள்ளார்.

இன்று தமிழக பட்ஜெட்:அனைத்து துறை செயலாளர்களுக்கும் போடப்பட்ட உத்தரவு என்ன தெரியுமா? | Tn Chief Secretary Has Directed All The Department

இது தொடர்பாக,அனைத்து அரசு செயலாளர்களுக்கும் இறையன்பு அவர்கள் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: “தமிழக பட்ஜெட் கூட்டத் தொடருக்காக மார்ச் 18 (இன்று) சட்டமன்றம் கூடுகிறது என்பதை நீங்கள் அறிவீர்கள்.

இந்தக் காலகட்டத்தில் உங்கள் இருப்பு அவசியம். எனவே, நீங்கள் தலைமையகத்தில் இருக்குமாறும்,சட்டசபை கூட்டத் தொடரின் போது சுற்றுப்பயணத்தை தவிர்க்குமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறீர்கள். உங்கள் கட்டுப்பாட்டில் உள்ள துறைத் தலைவர்களுக்கு நீங்கள் இதே போன்ற அறிவுறுத்தல்களை வழங்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.