'என்ட பேரு ஸ்டாலினு’ - மலையாளத்தில் பேசி அசத்திய தமிழக முதலமைச்சர்

kerala dmk mkstalin CPM marxistcommunistparty
By Petchi Avudaiappan Apr 09, 2022 11:43 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in தமிழ்நாடு
Report

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில மாநாட்டில் பங்கேற்ற தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலையாளத்தில் பேசி அசத்தினார்.  

கடந்த ஏப்ரல் 6 ஆம் தேதி கேரள மாநிலம் கண்ணூரில் தொடங்கிய கேரள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் 23 வது ஆண்டு மாநில மாநில மாநாடு நாளை நிறைவடைகிறது. இதில் சிறப்பு அழைப்பாளராக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டது. இதனையடுத்து நேற்று முதலமைச்சர் சென்னையிலிருந்து தனி விமானத்தில் புறப்பட்டு கண்ணூருக்கு சென்றார். 

அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்  மாநாட்டில் மத்திய - மாநில உறவுகள் என்ற தலைப்பில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது  மத்திய பாஜக அரசுக்கு எதிராக கடும் விமர்சனங்களை முன்வைத்த அவர் , இறுதியாக உரையாற்றிய போது “என்ட பேரு ஸ்டாலினு” என தொடங்கி சில வார்த்தைகள் மலையாளத்தில் பேசினார். 

இதனை அங்கிருந்தவர்கள் கைத்தட்டி வரவேற்றனர். இந்நிலையில் இதன் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.