மாநிலங்களவை தேர்தல்: தமிழ்நாட்டு வேட்பாளர்களின் பட்டியல்
தமிழ்நாட்டிலிருந்து மாநிலங்களவைக்கு தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களின் பதவிக்காலம் ஏப்ரல் 2ம் தேதியுடன் முடிவடைகிறது.
திமுக சார்பில் திருச்சி சிவா, என்.ஆர். இளங்கோ, அந்தியூர் செல்வராஜ், கனிமொழி சோமு, அதிமுகவின் தம்பிதுரை மற்றும் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன் ஆகியோரின் பதவிக்காலம் முடிவடைகிறது.
தமிழ்நாடு உட்பட காலியாக உள்ள 37 மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான தேர்தல் மார்ச் 16ல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது.
தமிழ்நாட்டை பொறுத்தவரையில் திமுக 4, அதிமுக 2 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படுவார்கள்.
திமுக கூட்டணியில், திமுக-2, காங்கிரஸ்-1, தேமுதிக-1 அதிமுக கூட்டணியில், அதிமுக-1, பாமக-1
திமுக கூட்டணி வேட்பாளர்கள்
திருச்சி சிவா (திமுக)
பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் (திமுக)
கிறிஸ்டோபர் திலக் (காங்கிரஸ்)
எல்.கே. சுதீஷ் (தேமுதிக)
அதிமுக கூட்டணி வேட்பாளர்கள்
தம்பிதுரை (அதிமுக)
அன்புமணி ராமதாஸ் (பாமக)
இவர்களில் பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன், கிறிஸ்டோபர் திலக், எல்.கே. சுதீஷ் ஆகியோர் முதல்முறையாக மாநிலங்களவைக்கு செல்லவுள்ளனர்.