துரைமுருகன் இலாகா மாற்றம்; ரகுபதிக்கு கனிமவள துறை - அமைச்சரவையில் அதிரடி
அமைச்சர் துரைமுருகனிடம் இருந்த கனிமவளத்துறை ரகுபதிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
இலாகா மாற்றம்
தமிழக அமைச்சரவையில் இருந்து செந்தில் பாலாஜி அமைச்சர் பதவியில் இருந்து விலகினார். அதேபோல பொன்முடியும் அமைச்சரவையில் இருந்து விடுவிக்கப்பட்டார். அவர்களுக்கு பதிலாக மனோ தங்கராஜ் புதிதாக சேர்க்கப்பட்டார்.
செந்தில் பாலாஜி வசம் இருந்த மின்சாரத் துறை அமைச்சர் சிவசங்கருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது. வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துச்சாமிக்கு மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
யாருக்கு எந்த துறை?
மேலும், அமைச்சர் ஆர் எஸ் ராஜகண்ணப்பனுக்கு வனத்துறை கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்பட்டது. மனோ தங்கராஜுக்கு பால்வளத்துறை ஒதுக்கப்பட்டது. இந்நிலையில் அடுத்த 2 வாரங்களில் அமைச்சரவையில் அதிரடியாக இலாகா மாற்றப்பட்டுள்ளது.
மூத்த அமைச்சரான துரைமுருகனிடம் இருந்த கனிமவளத்துறை ரகுபதிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. ரகுபதி வசம் இருந்த சட்டத்துறை அமைச்சர் துரைமுருகனுக்கு மாற்றப்பட்டுள்ளது.