தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் ஆகஸ்ட் 5-ல் தொடக்கம் - சபாநாயகர் அறிவிப்பு
தமிழக வெற்றிக் கழக அரசின் முதல் பட்ஜெட், 2026 ஆகஸ்ட் 5-ஆம் தேதி காலை 10 மணிக்கு தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்படுகிறது.
இதற்காக நடைபெறும் சட்டப்பேரவை கூட்டத்தில் நிதி அமைச்சர் மரிய வில்சன், 2026–27ஆம் ஆண்டிற்கான திருத்திய நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்ய உள்ளார்.

சபாநாயகர் அறிவிப்பு
இதுகுறித்து சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் வெளியிட்ட தகவலின்படி, தமிழ்நாடு சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் ஆகஸ்ட் 5-ஆம் தேதி தொடங்குகிறது.தொடர்ந்து, ஆகஸ்ட் 6-ஆம் தேதி வேளாண்மை பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது.
தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில், சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள சட்டப்பேரவை மண்டபத்தில் ஆகஸ்ட் 5-ஆம் தேதி காலை 10 மணிக்கு பேரவை கூடும் என்றும், 2026–27ஆம் ஆண்டிற்கான திருத்திய நிதிநிலை அறிக்கையை அன்றைய தினமே பேரவையில் தாக்கல் செய்ய ஆளுநர் தேதி நிர்ணயித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.