தமிழகத்தின் நிதி சிக்கலை சரி செய்ய 3 ஆண்டுகளாகும் - அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்
தமிழக சட்டப்பேரவையில் முதல் முறையாக காகிதமில்லாத இ-பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.
தமிழக சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு தலைமையில் இன்று கூடியது.இதில் 2021-22 ஆம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட்டை நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் இன்று தாக்கல் செய்தார்.
தொடர்ந்து பேசிய அவர் தமிழகத்தின் நிதிநிலை சிக்கலை சரிசெய்ய 2 அல்லது 3 ஆண்டுகளாகும் என தெரிவித்தார். மேலும் மாநில அரசின் நிதியை திசை திருப்பும் வகையில் மத்திய அரசின் வரிமுறை இருப்பதாகவும் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் கூறியுள்ளார்.
எனவே 6 மாதங்களில் வலுவான அடித்தளம் அமைக்கும் வகையில் பட்ஜெட் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த நிதியாண்டின் மீதமுள்ள 6 மாதங்களுக்கு மட்டுமே இது பொருந்தும் எனவும் அவர் தெரிவித்தார்.