இல்லத்தரசிகளுக்கு ஏமாற்றம் அளித்த தமிழக பட்ஜெட்

TVK
By Fathima Aug 05, 2026 08:47 AM GMT
Report

தமிழ்நாடு மக்கள் பெரிதும் எதிர்பார்த்த மகளிர் உரிமைத்தொகை ரூ.2500ஆக உயர்த்தி வழங்கப்படும் என்ற அறிவிப்பு இல்லாததால் மக்கள் ஏமாற்றமடைந்தனர்.

2026- 27ம் ஆண்டுக்கான தமிழ்நாட்டின் பட்ஜெட்டை இன்று நிதியமைச்சர் மரியவில்சன் தாக்கல் செய்தார்.

இதில் பெண்கள், இளைஞர்களுக்காக அறிவிப்புகள் வெளியாகும் என காத்திருந்த நிலையில் ஏமாற்றமே மிஞ்சியதாக பேசப்படுகிறது.

மிக முக்கியமாக குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் 2500 ரூபாய், விவசாய பயிர்கடன் முழுமையாக தள்ளுபடி, வீட்டிற்கு 6 இலவச சிலிண்டர், வேலையில்லா பட்டதாரிகளுக்கு 4000 ரூபாய், திருமணத்துக்கு ஒரு பவுன் தங்கம், 20 லட்ச ரூபாய் வரை கல்விக்கடன் உள்ளிட்டவை பார்க்கப்பட்டது.

ஆனால் பட்ஜெட் தொடங்கியவுடனே தமிழ்நாட்டின் கடன் இருமடங்காக உயர்ந்துள்ளதாகவும், புது திட்டங்கள் தொடங்க நிதிகுறைவாக இருப்பதாகவும் நிதியமைச்சர் பேசினார்.

இதனால் திருமணத்துக்கு ஒரு பவுன் தங்கம், 11ம் வகுப்பு மாணவர்களுக்கு சைக்கிளுடன் ஹெல்மெட், இலவச மடிக்கணனிகள் மட்டுமே அறிவிக்கப்பட்டது.

உரிமைத்தொகையை உயர்த்துவது குறித்தோ, வீட்டு உபயோக சிலிண்டர்கள் குறித்தோ அறிவிப்பு வெளியாகவில்லை.