தமிழ்நாடு பட்ஜெட் 2026

Budget 2026
By Fathima Aug 05, 2026 04:41 AM GMT
Report

 2026- 27ம் ஆண்டுக்கான பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது.

தமிழ்நாட்டில் ஜோசப் விஜய் தலைமையிலான தவெக அரசின் முதல் பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது.

காலை 10 மணியளவில் நிதியமைச்சர் மரிய வில்சன் பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.

இதற்கு முன்னதாக சட்டப்பேரவைக்கு வருகை தந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்யிடம் பட்ஜெட் நகலை காண்பித்து வாழ்த்து பெற்றார். 


பட்ஜெட் தாக்கல்

2026- 27ம் ஆண்டுக்கான பட்ஜெட் மிகச்சிறப்பாக இருக்க வேண்டும் என முதலமைச்சர் ஜோசப் விஜய் உத்தரவிட்டிருந்தார்,

ஒவ்வொரு துறையிலும் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள், துறை ரீதியாக தவெக அறிவித்துள்ள வாக்குறுதிகள் போன்றவற்றை அந்தத்த துறை அமைச்சர்கள் தன்னிடம் கொடுக்க வேண்டும் என முதலமைச்சர் உத்தரவிட்டிருந்தார்.

இதன்படி ஆய்வு மேற்கொண்டு தமிழக அரசின் நிதி நிலைமையை கருத்தில் கொண்டு பட்ஜெட்டில் முக்கிய திட்டங்களை முதலமைச்சர் ஜோசப் விஜய் முடிவு செய்துள்ளார்.